Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 16, 2019

தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை


வேலூர் மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


அலுவலகங்கள், பள்ளிகளில் அரசியல் தலைவர்களின் படங்களை அகற்றவும் பள்ளி வளாகங்களில் அரசு விளம்பரங்கள், அரசியல் தலைவர்கள் பெயர்களுடன் கல்வெட்டுகள், சின்னங்கள் இருந்தால் மறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சமூக வலைதளங்களில் அரசியல் சார்ந்த பதிவுகளை தவிர்க்கவும், மாவட்ட கல்வி அலுவலக இணையதள முகப்புகளில் அரசியல் தலைவர்களின் படங்கள் இருந்தால் நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளி வளாகங்களில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் மாதிரி வாக்குப் பதிவு நடத்த ஒத்துழைப்பு அளித்தல், வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளை தூய்மையுடனும், குடிநீர், மின் இணைப்பு, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடனும் பராமரித்தல் உள்ளிட்ட 15 அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன