Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 13, 2019

தேர்தலில் ‛விளையாடும்' சமூகவலைதளங்கள்




லோக்சபா தேர்தலில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் பலதரப்பினரின் பலதரப்பட்ட கருத்துக்கள் கோடிக்கணக்கான மக்களை சென்றடைய வாய்ப்பாக உள்ளது.




கடந்த தேர்தலில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்கு வகித்தன. தற்போது இவை பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக உருவெடுத்துள்ளன.


இதில் வரும் விமர்சனங்களை பொறுத்து வெற்றி, தோல்விகளை பாதிக்கும் என்பது தான் உண்மை. அரசியல் பற்றிய விமர்சனங்கள் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் பேஸ்புக் , டுவிட்டர் , வாட்ஸ்அப் போன்ற முக்கிய செயலிகள் இந்திய மார்க்கெட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகிறது.





இந்தியாவில் 90 கோடி பேர் வாக்களிக்க தகுதி உடையவர்கள். சமூக வலைத்தளங்கள் மக்களிடம் தவறான தகவல்களையும் சிலர் பரப்பி வருவதாகவும், பலர் அவதூறு செய்திகளை பரப்புவதாகவும் குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன.



செய்திகள் வெளிக்கொணர்வு

கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா என்ற அமைப்பு சமூக வலைத்தளங்கள் மூலம் பயனீட்டாளர்கள் வெளியிடும் தகவல்கள் , கருத்துக்கள் ,பதிவுகளை ஆராய்ந்து மக்களின் ஆதரவு , எதிர்ப்பு யாருக்கு உள்ளது என்பதை வெளிக்காட்டுகிறது.




பல ஊடகங்கள் அரசியல் தலைவர்களின் நேர்க்காணல் தொகுப்பு மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட கருத்துக்களையும் மக்களுக்கு எளிதாக எடுத்துச் செல்கின்றன.


தேர்தல் கணிப்பு மாதிரிகளை நடத்தியும் மக்களின் ஆதரவு யாருக்கு என்பதையும் பகிரங்கமாகவே செய்திகளையும் வெளியிடுகிறது. சிலர் வதந்திகளை பரப்புவதால் உண்மை குறித்து அறிவதில் குழப்பம் ஏற்படுகிறது.


இதனால் சமூக வலைத்தளங்களின் மீதான நம்பிக்கை மக்களிடம் குறைய வாய்ப்பாக அமைகிறது. பல சமயங்களில் பல்வேறு தாக்கங்களையும், பிரச்சினைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது சமூகவலை தளங்கள்.



உதாரணமாக வாட்ஸ் அப்பில் வந்த செய்தி, மெக்ஸிகோ, நைஜீரியா, பிரேசில் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் வெளியாகும் கருத்துக்கள் பற்றி பேஸ்புக்கின் பொது பாலிசி இயக்குனர் ஷிவ்நாத் அமெரிக்க செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்; சமூக வலைத்தளங்கள் குறித்து பலரும் பலவாறான கருத்துக்களை கூறிவருகின்றனர். இந்த துறையில் பலரும் வேலை செய்து வருகின்றனர்.


மக்களின் உண்மை சம்பவங்களையும் , முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் தெரியப்படுத்துவதை தடை செய்வது எளிதானது அல்ல என்றார்.