Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, March 15, 2019

மொபைல் எண் & பெயர் மூலம் ஆதார் கார்டு ஸ்டேட்டஸ் விவரங்களை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?



இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் வழங்கிய ஆதார் அடையாள அட்டையை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் 2016 ஆம் ஆண்டு ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டது.
அதன் பின்பு நடந்தஆதார் சர்ச்சைகளுக்கு பிறகு ஆதார் கட்டாயமில்லை என்பது போல உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.தனிநபர் அடையாள அட்டை இருப்பினும் இன்னும் பல தனிநபர் அடையாள சான்றிதழ்கள் ஆதரவுடன் இனிக்கப்பட்டுதான் உள்ளது. தனிநபர் அடையாள அட்டையை இன்னும் பல இடங்களில் பயன்படுத்தித் தான் வருகிறோம்.


ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸ்

உங்கள் ஆதார் அட்டையின் ஸ்டேட்டஸ் மற்றும் அதில் பதிவிடப்பட்டுள்ள உங்களின் விபரங்களை, மொபைல் எண் மற்றும் பெயர் வைத்து ஆன்லைன் இல் எப்படி சரி பார்ப்பது என்று பார்க்கலாம்.
ஆதார் விபரங்களை எப்படி ஆன்லைன் இல் சரிபார்ப்பது:

- முதலில் uidai.gov.in தளத்தை ஓபன் செய்துகொள்ளுங்கள்.



- மை ஆதார் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- அதன் கீழ் காணப்படும் செக் ஆதார் ஸ்டேட்டஸ் ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
புது டேப்

- உங்கள் ஆதார் ஸ்டேட்டஸ் இன் புது டேப் ஓபன் ஆகிவிடும்.
- அதில் உங்கள் கார்டின் 14 இலக்கு என்றொல்மெண்ட் ஐடியை பதிவு செய்துகொள்ளுங்கள்.
- செக்யூரிட்டி கோடு எண்களையும் என்டர் செய்து செக் ஸ்டேட்டஸ் கிளிக் செய்யுங்கள்.



இதன்படி உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் விபரங்களை எளிதில் அறிந்துகொள்ளலாம்.
தொலைந்த ஆதார் அட்டையை மொபைல் எண் மற்றும் பெயர் வந்து எப்படித் திரும்பப் பெறுவது:

- முதலில் uidai.gov.in தளத்தை உங்களின் மொபைல் அல்லது லேப்டாப்பில் ஓபன் செய்துகொள்ளுங்கள்.



- அதன் கீழ் காணப்படும் "Retrive Lost or Forgotten EID/UDI" ஆப்ஷனை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
- உங்களின் பெயர், மொபைல் எண், ஈமெயில் ஐடி மற்றும் செக்யூரிட்டி கோடு எண்களை என்டர் செய்து சென்ட் ஒடிபி கிளிக் செய்யுங்கள்.
- உங்கள் எண்ணிற்கு வந்த ஒடிபி எண்களை "Verify OTP" கிளிக் செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
டவுன்லோட் ஆதார் கார்டு



- உங்களின் ஆதாரின் 12 இலக்கு எண் மற்றும் 14 இலக்கு என்றொல்மெண்ட் ஐடி எஸ்.எம்.எஸ் ஆகா அனுப்பப்படும்.
- uidai.gov.in தளத்தின் ஹோம் பேஜ் சென்று "I have" ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- இப்பொழுது உங்களின் 14 இலக்கு என்றொல்மெண்ட் ஐடி, பின் நம்பர், மொபைல் எண் மற்றும் பெயர் டைப் செய்து கொள்ளுங்கள்.
- "Validate and Download" ஆப்ஷனை கிளிக் செய்து உங்களின் ஈ-ஆதார் கார்டு விபரங்களை உங்களின் போன் ஆழத்து லேப்டாப் இல் டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.