Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 10, 2019

கல்வித் தரம் சீர்கெடக் காரணம் என்ன? பின்னணியில் யார்?



கல்வியில் இந்தியாவின் நிலை மிகவும் பின்தங்கியுள்ளது. கல்விக்கான முழு நிதியும் அரசே செலவழிக்க வேண்டும். உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) குறைந்த பட்சம் ஆறு சதவீதத்தை கல்விக்கு ஒதுக்க வேண்டும். தற்போது 3.8 சதவீதம் தான் ஒதுக்கப் படுகிறது.

கியூபாவில் 18 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. ஜிடிபியில் அதிகளவு கல்விக்கு ஒதுக்குவது செலவு அல்ல. வருங்கால வளர்ச்சிக்கான முதலீடு- முன்னாள் கல்வியாளரும், இந்நாள் பொதுநல அறிவுஜீவியுமான வசந்திதேவி.

இந்தம்மா, துணைவேந்தரா இருந்தபோது அந்த பல்கலைக்கழகத்துல கல்விக்கட்டணம் வசூலிக்கப்படவில்லையா? வசூலிக்கப்பட்டதென்றால், அதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தாங்க? ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இப்ப இப்படி போற போக்குல சொல்லிட்டுப் போறது யாரை ஏமாத்த?



சரி, அதையும் விட்டுடுங்க, இலவசமா கல்வி வேணும், ஆனா அதிலயும், நுழைவு த்தேர்வு கூடாது, பரிட்சை மார்க்குலயும் சலுகை வேணும், அதுவும் இட ஒதுக்கீடு அடிப்படையில வேணும், முடிச்சவுடனே அரசு வேலை வேணும், சந்தர்ப்பம் கிடைச்சா, வெளிநாட்டுல போஸ்டிங் வேணும், இவ்வளவும் வாங்கியபின்னும், ஜாதி அடிப்படையில், தனது பிள்ளை, பேரன், பேரனுக்கு பேரனுக்கும் அத்தனை சலுகையும் வேணும்.

இவ்வளவையும், தகுதியின் அடிப்படையில் அனுபவித்த பின்னர், இந்தியாவில் கல்வி நிலை கவலைக்கிடமாக உள்ளது; இதனை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று கருத்து கூந்தலை அள்ளி முடிவது என்ன டிசைனோ?



அதென்னங்க, ஆ, ஊன்னா, கியூபாவை பாரு, சைனாவை பாருங்கறீங்க?
கியூபாவுலயும், சைனாவுலயும் இதுபோல அரசை விமர்சனம் மட்டுமல்ல, விமர்சனம் பண்ணனும்ன்னு நினைத்தாலே என்ன நடக்கும் தெரியுமா? அதை ஏன் இந்த ரிடையர் ஆன அறிவுஜீவிகள், பிழைப்புபோன நடிகர்கள், இயக்குனர்கள் சொல்லுவதில்லை?



உயர் கல்வின்னா, அமெரிக்காவுல எவ்வள காஸ்டலின்னு தெரியுமா? அதுக்கு அவனவன் எவ்வளோ நாக்கு தள்ளிப் போறான்னு தெரியுமா? சும்மா, குண்டுசட்டியில குதிரை ஓட்டிக்கிட்டு.. - மு.ராம்குமார் (கல்வியாளர்)