Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 13, 2019

பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அகராதி வழங்கிய முகநூல் நண்பர்கள்



திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் முத்துப்பேட்டை அருகேயுள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்குத் தோள் கொடுப்போம் திட்டத்தின்கீழ் ஆளுக்கொரு ஆங்கில அகராதி வழங்கும் விழா பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றது.

ஆசிரியை ஹேமாவதி அனைவரையும் வரவேற்றார். முகமறியாத முகநூல் நண்பர்கள் அளித்த நிதியுதவியில் விலை மதிப்புள்ள ஆங்கில அகராதியினை 6,7,8 வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒருங்கிணைப்பாளர் முனைவர் மணி கணேசன் வழங்கிச் சிறப்புரை நிகழ்த்தினார். புவி வெப்பமாதலைத் தடுக்கும் வகையில் ஆளுக்கொரு மரக்கன்று நட்டுப் பராமரிக்க உறுதி எடுத்துக்கொள்ள வலியுறுத்தப்பட்டது.

அதிக மரக்கன்றுகள் வளர்த்து ஆளாக்குவோருக்கு கிரீன் நீடா சார்பில் தங்க நாணயம் பரிசளிக்கப்படும் என்று அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகமடைந்தனர். ஆசிரியை சுகுணா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர் திலகராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் செய்திருந்தனர்.