Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 16, 2019

RRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பார்மசிஸ்ட், மலேரியா ஆய்வாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1937


RRB RECRUITMENT 2019 | RRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : பார்மசிஸ்ட், மலேரியா ஆய்வாளர் உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 1937 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.04.2019. இணைய முகவரி : www.rrbchennai.net ரெயில்வேயில் துணை மருத்துவம் படித்தவர்களுக்கு 1937 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- மத்திய ரெயில்வே துறை சமீபத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில் ஒவ்வொரு துறை பணிகளுக்கான காலியிடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு 35 ஆயிரத்து 277 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதுபற்றிய விவரங்களை கடந்த வாரம் பார்த்தோம். தற்போது துணை மருத்துவம் சார்ந்த பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு மொத்தம் 1937 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இதில் அதிகப்படியாக ஸ்டாப் நர்ஸ் பணிக்கு 1109 இடங்களும், மலேரியா ஆய்வாளர் பணிக்கு 289 இடங்களும், பார்மசிஸ்ட் பணிக்கு 277 இடங்களும், ரேடியோகிராபர் பணிக்கு 61 இடங்களும், லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 82 இடங்களும் உள்ளன. இவை தவிர இ.சி.ஜி டெக்னீசியன், பிசியோ தெரபிஸ்ட், ஆப்டோமெட்ரிஸ்ட், டயாலிசிஸ் டெக்னீசியன், டயட்டீசியன் போன்ற பணிகளுக்கும் கணிசமான இடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களில் சென்னை ரெயில்வே தேர்வு வாரியத்திற்கு 173 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதுடையவர்களாக இருக்க வேண்டும்.

1-7-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வும் அனுமதிக்கப்படுகிறது. கல்வித்தகுதி நர்சிங், டென்டல் ஹைஜீனிஸ்ட், புட் அண்ட் நியூட்ரீசியன், ஆப்டோமெட்ரி, பெர்பியூசன் டெக்னாலஜி, பார்மசி, ரேடியோகிராபர், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட படிப்புகளில் டிப்ளமோ படித்தவா்கள் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். கட்டணம் பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், அனைத்து பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது. கட்டணத்தை இணையதளம் வழியாகவும், வங்கிகள் வழியாகவும் செலுத்தலாம். கட்டணம் வங்கி வழியாக செலுத்த ஏப்ரல் 4-ந் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்கும் முறை விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற ஏப்ரல் 2-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

இதற்கான கணினி அடிப்படையிலான தேர்வு ஜூன் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளிவரும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://www.rrbchennai.net/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.