Tuesday, April 23, 2019

10, 11,12 -ஆம் வகுப்புகளுக்கு சிறப்பு துணைத் தேர்வு: அட்டவணை வெளியீடு

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு சிறப்புத் துணைத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்த தகவல்:
பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு வரும் ஜுன் 6-ஆம் தேதி தொடங்கி ஜுன் 13-ஆம் தேதி முடிவடைகிறது. இதற்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 வரையிலும், பழைய வினாத்தாளை அடிப்படையாகக் கொண்ட தேர்வுகள் காலை 10 மணி முதல் நண்பகல் 1.15 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.


பிளஸ் 1 வகுப்புக்கான சிறப்புத் துணைத் தேர்வு ஜுன் 14-ஆம் தேதி தொடங்கி ஜுன் 21-ஆம் தேதி முடிவடைகிறது. காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை தேர்வுகள் நடைபெறும். இதேபோன்று பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வு ஜுன் 14-ஆம் தேதி தொடங்கி ஜுன் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் நண்பகல் 12.45 மணி வரை தேர்வுகள் நடைபெறும் என்றார்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE
Back To Top