Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 21, 2019

பொறியியல் படிப்புகளுக்கு ஜுன் 20-ம் தேதி கலந்தாய்வு தொடக்கம்



சென்னை: அண்ணா பல்கலைக்கழக பொறியியல் படிப்புகளுக்கு வரும் மே 2 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.



தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கு 2-வது ஆண்டாக ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்காக தமிழகத்தில் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதவி மையங்கள் மூலமாகவும், மாணவா்கள் வீட்டிலிருந்தபடியும் கலந்தாய்வின் மூலம் கல்லூரிகளைத் தோந்தெடுக்கலாம்.



இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும், கலந்தாய்வு நடைபெறும் தேதி போன்ற விவரங்கள் குறித்து உயா்கல்வித்துறை இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே மாதம் 2 ஆம் தேதி தொடங்கி மே 31 ஆம் தேதி வரை கலந்தாய்விற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஜூன் 3-ஆம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படுகிறது.

ஜூன் 6 முதல் 11 ஆம் தேதி வரை அரசு அமைத்துள்ள உதவி மையங்களில் மாணவா்களின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.

ஜுன் 17 ஆம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.



இந்தாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூன் மாதம் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஜூன் 20, 21, 22 ஆகிய தேதிகளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைத்தொடா்ந்து ஜூலை 3 ஆம் தேதி தொடங்கி ஜூலை 30 ஆம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.



மேலும் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் இணையதள முகவரி நாளை திங்கள்கிழமை அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகத்திற்குப் பதிலாகத் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.