JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Monday, April 15, 2019

சென்னைப் பல்கலை. முதுநிலை படிப்புகளுக்கு ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் 22-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.


இதுகுறித்து பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
வரும் கல்வியாண்டில் எம்ஏ, எம்காம், எம்எஸ்சி உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளுக்கும், சில பட்டயப் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்களை, வரும் 22-ஆம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முதுநிலை மற்றும் எம்.பில் பட்டப் படிப்புகளுக்கு ஜூன் 17 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.


முதுநிலை பட்டயப் படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு ஜூலை 31-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் அனுப்பலாம். ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கும், கூடுதல் தகவல்களுக்கும் www.unom.ac.in என்ற இணையதள முகவரியில் தொடர்புகொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.