Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 27, 2019

தேவஸ்தானக் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் மே 25 வரை நீட்டிப்பு



திருப்பதி தேவஸ்தான கல்லூரிகளில் விண்ணப்பங்களை விநியோகிக்கும் பணி மே 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


தேவஸ்தானம் திருப்பதியில் நடத்தி வரும் ஸ்ரீபத்மாவதி மகளிர் கலை கல்லூரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலைக் கல்லூரி, ஸ்ரீகோவிந்தராஜ சுவாமி கலைக் கல்லூரி, ஸ்ரீபத்மாவதி ஜூனியர் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் 2019-2020-ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் வரும் மே மாதம் 25-ஆம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை admission.tirumala.org என்ற இணையதளம் வழியாகப் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும்போது ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள இணையதளத்தின் தொடக்கத்தில் திரையின் மீது ஒளிரும் ஹெல்ப் லைன் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.