Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 10, 2019

ரூ. 52 ஆயிரம் சம்பளத்தில் தமிழக வனத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..!



தமிழக அரசின் வனத்துறையில் நிரப்பப்பட உள்ள 564 வனக்காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



மொத்த காலியிடங்கள்: 564

பணி: வனக்காவலர்

காலியிடங்கள்: 465 + 99 (தோராயமாக)

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400



விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.forests.tn.gov.in என்னும் வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக்கட்டணம்: ரூ.150 மற்றும் உரிய சேவைக்கட்டணம். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், உடற்தகுதி மற்றும்உடற்திறன் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2019 ஜூன் நான்காவது வாரம் நடைபெறும்.



தேர்வுக்கான பாடத்திட்டம் வனத்துறையின் www.forests.tn.gov.in வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttps://www.forests.tn.gov.in/app/webroot/img/document/news/usrc/FW-2019/FW_Notifn-Tam_07032019.pdf என்ற கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.05.2019