Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 13, 2019

எஸ்பிஐ வங்கியில் 8,653 கிளரிக்கல் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?



அனைவராலும் எஸ்பிஐ என அழைக்கப்படும் "ஸ்ட்டே பேங்க் ஆப் இந்தியா"-வில் கிளரிக்கல் எனப்படும் 8,653 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கான தேர்வு அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 421 இடங்களும், புதுச்சேரிக்கு 4 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



மொத்த காலியிடங்கள்: 8,653

பணி: Junior Associate (Customer Support & Sales)

தகுதி: 31.08.2019-க்குள் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.04.2019 தேதியின்படி 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 01.04.1999க்கு முன்பும் 02.04.1991க்கு பின்னும் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.



சம்பளம்: மாதம் ரூ.13,075 - 31,450

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.750, மற்ற பிரிவினர் ரூ.125 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை தேர்வு 3 பிரிவுகளின் கீழ் 100 மதிப்பெண்களுக்கும் அப்ஜெக்டிவ் முறையில் இருக்கும்.

இதற்கான தேர்வு ஒரு மணி நேரம். முதன்மை தேர்வானது 4 பிரிவுகளின் கீழ் அப்ஜெக்டிவ் முறையில் 200 மதிப்பெண்களுக்கு 190 கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வு 2 மணி நேரம் 40 நிமிடம் நடைபெறும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு.



விண்ணப்பிக்கும் முறை: https://www.sbi.co.in, https://bank.sbi/careers, https://www.sbi.co.in/careers போன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://www.sbi.co.in/webfiles/uploads/files/careers/11042019_SBI_CLERICAL_RECT_ADVERTISEMENT_2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.



ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.05.2019