தமிழில் 'நீட்' தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு: இணையதளத்தில் இன்று ஹால்டிக்கெட்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வை தமிழில் எழுத விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும்தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ்,

பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-10-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 5-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கி30-ம் தேதியுடன் முடிவடைந்தது.

இதற்கிடையில் 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என்று டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதையடுத்து நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் டிசம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்

www.nta.ac.in / www.ntaneet.nic.inஇணையதளங்களில் வரும்15-ம் தேதி (இன்று) பதிவேற்றம் செய்யப்படுகிறது. நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் இணையதளங்களில் இருந்து ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Share:

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel