JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, April 2, 2019

மத்திய அரசில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய அணுமின் நிலையத்தில் (என்பிசிஐஎல்) காலியாக உள்ள 200 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 200 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:




1. மெக்கானிக்கல் - 83


2. கெமிக்கல் - 13


3. எலக்ட்ரிக்கல் - 45


4. எலக்ட்ரானிக்ஸ் - 5


5. இன்ஸ்ட்ருமென்டேசன் - 5


6. சிவில் - 40


தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன், இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கண்ட்ரோல் இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில் போன்ற பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள்



சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள வயது வரம்பு: 23.04.2019 தேதியின்படி பொதுப்பிரிவினர் 26க்குள்ளும், ஒபிசி பிரிவினர் 29க்குள்ளும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு - 31க்குள்ளும், மாற்றுத்திறனாளிகள் - 41க்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 31 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500, எஸ்சி எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்கும் முறை : https://npcilcareers.co.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.04.2019 மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://npcilcareers.co.in/ethq2019/documents/advt.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.