JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, April 19, 2019

அரசு பள்ளியில் படிக்க மாணவர்களுக்கு அழைப்பு




கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்க வருமாறு பள்ளி நிர்வாகம் மாணவ, மாணவியருக்கு அழைப்பு விடுத்துள்ளது.தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் ஆறாம் வகுப்பு முதல், 10 வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு தனியார் பள்ளிக்கு நிகரான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இப்பள்ளியில் தரமான கட்டடம், ஸ்மார்ட் வகுப்பு, 10ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடங்கள், தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், வகுப்பறையில் பேன், மின்சார வசதி, சுகாதாரமான கழிப்பிட வசதி, மாணவியருக்கு இன்சினரேட்டர் வசதிகள் உள்ளன.கராத்தே, யோகா பயிற்சி வகுப்புகள், விலையில்லாத பாடபுத்தகம், நோட்டு, சீருடை, அட்லஸ் உள்ளிட்ட அரசால் வழங்கப்படும் விலையில்லாத பொருட்கள் அனைத்தும் வழங்கப்படும்.மேலும், எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் கல்வி உதவித் தொகை உள்ளிட்டவையும் வழங்கப்படும்.