Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 9, 2019

மத்திய சாலை ஆராய்ச்சி மையத்தில் வேலை வேண்டுமா?



மத்திய விஞ்ஞானம் மற்றும் தொழிற்சாலைகள் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய சாலை ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



மொத்த காலியிடங்கள்: 41

பணி: Technician (1)
காலியிடங்கள்: 26
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

பணி: Technical Assistant
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவுகளில் ஐடிஐ முடித்து பணி அனுபவம் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.



வயதுவரம்பு: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.crridom.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Controller of Administration, CSIRCentral Road Research Institute, Delhi-Mathura Road, PO CRRI,
New Delhi -110 025



மேலும் முழுமையான விவரங்கள் அறிந்துகொள்ளhttp://www.crridom.gov.in/sites/default/files/Detailed-T1-TA-advt-08-03-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2019