அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம்: கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம்!


இன்று வெளியாகியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவில்,அரசுப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி விகிதத்தில்கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.



2018-19 கல்வியாண்டுக்கானபிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகியுள்ளன.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதிய நிலையில்,91.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் மாணவர்கள் 88.57%, மாணவியர் 93.64%.
தமிழகத்தில் சிறைகளில் உள்ள 45 சிறைக்கைதிகள் தேர்வு எழுதிய நிலையில், அதில் 34 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் 2692 பேர் தேர்வு எழுதினர். அதில் 2404 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தில்,கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 92.46%சதவீதமாக உள்ளது.
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel