JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, April 23, 2019

தொழில் பழகுநர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய தொழில் பழகுநர் தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை கடைசி நாள் என மாவட்ட திறன்மேம்பாட்டு உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மதுரை மாவட்டத்தில் தொழில்பழகுநர் பயிற்சியை முடிக்கவிருக்கும் பயிற்சியாளர்களுக்கு 109 ஆவது அகில இந்திய தொழில்பழகுநர் தேர்வு மே 25 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த தேர்வில் பங்கேற்க உள்ளவர்கள் WWW.APPRENTICESHIP.GOV.IN என்ற இணையதளத்தின் வாயிலாக திங்கள்கிழமைக்குள் (ஏப்ரல் 22) விண்ணப்பிக்கலாம். மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு உதவி இயக்குநர் (பயிற்சி) அலுவலகத்தை நேரிடையாக அணுகலாம் அல்லது 94865-54142, 94423-76775 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட உதவி இயக்குநர் க.பாலமுருகன் தெரிவித்துள்ளார்.