ராணுவ வீரர்களுக்கு, இணைய தளம் மூலம் ஓட்டுச்சீட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் நடைமுறையை அமல்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.தேர்தல் ஆணையம் சார்பில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், ராணுவ வீரர்கள், சொந்த ஊருக்கு வந்து ஓட்டை பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது. அஞ்சல் மூலம், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் தபால் ஓட்டுக்களை அனுப்பி, அதை மீண்டும் தேர்தல் அதிகாரிகளுக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கின்றனர். இந்திய ராணுவத்தில், தமிழகத்தை சேர்ந்த, 63 ஆயிரத்து, 77 பேர் பல்வேறு இடங்களில் பணி செய்கின்றனர். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ராணுவ வீரர்கள் உட்பட தபால் ஓட்டுகளுக்கான ஓட்டுச்சீட்டு அச்சிடும் பணி துவங்க உள்ளது.
அச்சுப்பணி முடிந்தபின், அஞ்சல் மூலம் அவர்களுக்கு அனுப்பி, திரும்ப பெறப்படும். தற்போதே அவர்கள் ஓட்டுச்சீட்டை பெற்ற விபரம் மற்றும் அனுப்பிய விபரத்தை ஆன்லைனில் தெரிவிக்க, தேர்தல் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது. இம்முறை கால விரயத்தை ஏற்படுத்துவதால், இணையதளத்தில் ஓட்டுச்சீட்டை அனுப்பி, பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் நடைமுறையை அமல்படுத்த, ராணுவ வீரர்கள் கோரி வருகின்றனர்.
இம்முறையால், அஞ்சலில் அனுப்பி, மீண்டும் அஞ்சல் மூலம் திரும்ப பெறப்படும் இழுபறி நீங்கும். விரைவாகவும், உறுதியாகவும் தபால் ஓட்டுகள் திரும்ப பெறப்படும். ஆன்லைனில் அனுப்பும் முறையை, ஐந்தாண்டுக்கு முன்பே, தேர்தல் ஆணையம் பரிசீலித்துவிட்டு, ஏனோ கைவிட்டு விட்டது. இதை நடைமுறைப்படுத்த ராணுவ வீரர்கள் எதிர்பார்க்கின்றனர்