Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 24, 2019

ராஜராஜ சோழன் சமாதி விவகாரம்: அதிநவீன தொழில்நுட்பங்களுடன் தொல்லியல் துறையினர் ஆய்வு.!


கும்பகோணம் அருகே உள்ள உடையாளூரில் ராஜராஜன் சமாதி இரக்கின்றதா என்பதை ஆராய்ச்சி செய்து அறிக்கை அனுப்ப வேண்டுமென தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்திரவிட்டதை தொடர்ந்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.


திருக்கோயிலூரில் பிறந்த ராஜராஜ சோழன் கி.பி.985-ம் ஆண்டு சோழப் பேரரசனாக முடி சூட்டிக் கொண்டு தென்னிந்தியாக முழுவதும் தனது பேரரசைப் பரப்பினார்.தென்னிந்தியாவில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை நிரூப்பிக்கும் வகையில் பல சிற்றரசர்களை வெற்றி பெற்று வந்தார்.வாழ் நாளில் ஏதாவது சாதிக்க வேண்டும்

பின்பு தன்னுடையா வாழ் நாளில் ஏதாவது சாதிக்க வேண்டும் எனக் கருதிய ராஜராஜன் தன்னுடைய தெய்வபக்தியையும், கலையை நேசிக்கும் விதத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தஞ்சாவூர் பெரிய கோவிலை கி.பி 1010-ம் ஆண்டில்
கட்டி முடித்தார. பின்னர் கி.பி. 1012-ம் ஆண்டில் ராஜராஜ சோழன் தனது பட்டத்தைத் துறந்து, தன் மகன் ராஜேந்திர சோழனுக்கு முடிசூட்டினார்.
கி.பி.1014-ம் ஆண்டு ராஜராஜ சோழன் காலமானார்

அதன்பின்னர் மகனது ஆட்சிக் காலத்தில் தனது வாழ்நாளை பழையாறை-யில் கழித்ததாக வரலாற்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அப்போது கி.பி.1014-ம் ஆண்டு ராஜராஜ சோழன் காலமானார். பின்னர் மாறவர்மன் சுந்திர பாண்டியன் தன் மூதாதையர்கள் மீது சோழர்கள் போர் தொடுத்ததை எண்ணிப் பழிவாங்கும் நோக்கில் சோழப் பேரரசு மீது போர் தொடுத்து பழையாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை அழித்தான். அதில் எஞ்சிய இடங்களில் ஒன்றான உடையாளூரில் இருக்கும் பால்குளத்தம்மன் கோவிலில் இன்றும் ராஜராஜன் நிறுவிய கல்வெட்டு ஒன்று ஆதராமாக உள்ளது.
சோழனின் சமாதி



உடையாளூர் கிராமத்தில் ராஜராஜ சோழனின் சமாதி இருப்பதாக கல்வெட்டு ஆய்வாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக தெரிவித்துவந்தனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன்
என்பவர், கும்பகோணம் அருகே உடையாளூரில் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யபட்டதாக கூறப்படும் இடத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும், வங்காள விரிகுடா அல்லது இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் ராஜராஜ சோழனுக்கு மகிப்பெரிய சிலை அமைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.


எல்.கிருபாகரன்

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் எல்.கிருபாகரன், எஸ்.எஸ் சுந்தர் ஆகியோர் அமர்வு தமிழக அரசுக்கு அகழ்வாராய்ச்சி மூலம் ராஜராஜசோழன் உடன் அடக்கம் செய்யப்பட்ட இடம் உடையாளூர் தான
என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.


அதிநவீன தொழில்நுட்ப சாதனங்கள்

அதை தொடர்ந்து தமிழகத் தொல்லியல் துறையினர் துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையிலான குழவினர் உடையாளூரில் அதிநவீன தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் ஆய்வுப் பணியை கடந்த திங்கள் அன்று
தொடங்கினர்.
ஊடுருவிச் செல்லும் ரேடார்



இதில் அமெரிக்காவிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட, நிலத்தை ஊடுருவிச் செல்லும் ரேடார் இயந்திரம் என்ற தரையை ஊடுருவும் கருயைக் கொண்டு,சமாதி இருப்பதாக கூறப்படும் இடத்தை சுற்றிலும் சுமார் 50அடிக்கு நிலத்தடியில் ஸ்கேன் செய்து வருகின்றனர். இதில் மதில்கள் பொருள்கள் புதையுண்டு கிடந்தால் அவற்றை ஸ்கேன் மூலம் பதிவு செய்யப்படும் என்றும், இந்த இடத்தை சுற்றி ஸ்கேன் செய்தபிறகு ஆய்வு அறிக்கையை தமிழகத் தொல்லியல் துறைக்க வழங்கப்படும் என்றார் சிவானந்தம்


சென்னை



மேலும் இதுகுறித்து தொல்லியல் துறைத் துணை இயக்குநர் சிவானந்தம் தெரிவித்தது என்னவென்றால் இரு நாட்கள் அதிநவீன இயந்திரம் மற்றும் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது, இங்கு சேகரித்த ஆய்வை சென்னைக்கு எடுத்து சென்று முழுமையாக அறிக்கை தயார் செய்து 15நாட்களுக்குள் நீதிமன்றத்துக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.