தொழிலாளர் படிப்புகளில் சேர வாய்ப்பு

சென்னை,தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் நடத்தும், டிப்ளமா மற்றும் பட்டப் படிப்புகளில் சேர, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில், தொழிலாளர் மேலாண்மையில், பி.ஏ., - எம்.ஏ., - தொழிலாளர் சட்டம் - முதுநிலை பட்டப்படிப்பு, மாலை நேரம்; தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும், வார இறுதி டிப்ளமா படிப்புகளாக நடத்தப்பட்டுவருகின்றன.பட்டப் படிப்புகள், சென்னை பல்கலையாலும், டிப்ளமா படிப்புகள், தமிழக அரசாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.


பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பட்டப் படிப்பிற்கும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள், முதுநிலை பட்டம் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பங்கள், ஏப்., 15 முதல் வழங்கப்படுகின்றன. மே, 30 மாலை, 5:00 மணி வரை, வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 28க்குள் வழங்க வேண்டும். தபாலிலும் விண்ணப்பங்களை பெறலாம்.மேலும் விபரங்களை, 98841 59410 என்ற மொபைல் போனில் பேசி தெரிந்து கொள்ளலாம். சென்னை, காமராஜர் சாலையில் உள்ள, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தையும் தொடர்பு கொள்ளலாம்.
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel