SLAS தேர்வு தகவல்

அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி* (நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்) பள்ளிகளுக்கும் 09.04.2019 அன்று நடைபெறும்.

7-ஆம் வகுப்பின் அனைத்து மாணவர்களுக்கும் நடைபெறும்.

09.04.2019 அன்று மதியம் (2.30-4.30 -2 மணி நேரம்) SLAS தேர்வு நடைபெறுவதால் அன்று தேர்வுக்கு 7ஆம் வகுப்பு அனைத்து மாணவர்களும் கலந்துக் கொள்ள உரிய ஏற்பாட்டினை செய்ய வேண்டும்.



வருகை புரியாத மாணவர்களை கழித்து மீதமுள்ள மாணவர்களுக்கு வரிசை எண் உருவாக்கப்பட்டு அவர்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெறும்

தேர்வு நாளுக்கு முன்னதாகவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு *OMR Sheet -ல் பூர்த்தி செய்ய பயிற்சி அளிக்கவும்

SLAS தேர்வு அன்று மாணவர்கள் *OMR Sheet -ல் மாணவர் விவரங்கள் மற்றும் வினாக்களுக்கான விடைகளை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்ற தகவலை மாணவர்களுக்கு தெளிவுபட பயிற்றுவிக்க வேண்டும் Blue அல்லது Black Ball point Pen தான் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஏழாம் வகுப்பில் அனைத்து மாணவர்களின் ஆதார் எண் பிறந்த தேதி மற்றும் EMIS எண்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும்.



9.4.2019 அன்று மதியம் மாணவர்களுக்கான வருகைப்பதிவேட்டை போட்ட பிறகு அதை Xerox copy எடுத்து தங்கள் பள்ளிக்கு வரும் Invigilator-இடம் ஒப்படைக்கவும். முன்பே நகல் எடுக்க வேண்டாம்.

சிறப்பான முறையில் தேர்வு நடத்த முன் திட்டமிடல் மிக மிக அவசியமானது. ஆகவே மேற்கூறிய முறைகளை பின்பற்றி தேர்வு சிறப்பாக நடைபெற உறுதுணையாக அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Share:

Total Pageviews

Categories