Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, May 13, 2019

ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி: மே 18 வரை விண்ணப்பிக்கலாம்


இலவச கட்டாய கல்விஉரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர இதுவரை, 88,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தியில், 'இலவச கட்டாய கல்விஉரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர இதுவரை, 88,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் பயில மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என்று தெரிவித்துள்ளது.


2019 - 2020 ஆம் ஆண்டுக்கான அரசின், 25% ஒதுக்கீட்டில், 1.20 லட்சம் இடங்கள் உள்ளன. கட்டாய கல்விச் சட்டப்படி, ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகளுக்கு அரசே வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.