பிளஸ்-2 விடைத்தாள் திருத்துவதில் கவனக்குறைவாகச் செயல்பட்டதாக 500 ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உயர்கல்வியை நிர்ணயிப்பதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் பிளஸ் 2 உள்ளிட்ட பொதுத்தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மாணவர்கள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பது வழக்கம்.
கூட்டலில் தவறுகள்: இந்த ஆண்டு அதிகளவிலான மாணவர்களுக்கு பிளஸ்-2 மதிப்பெண் கூட்டலில் தவறு ஏற்பட்டுள்ளதை, விடைத்தாள் நகல் வாங்கிய மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 100-க்கு 72 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவருக்கு 27 மதிப்பெண் பெற்றதாக கூட்டலில் தவறிழைத்து தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று ஒரு பாடத்தில் 81 மதிப்பெண் எடுத்த மாணவருக்கு 57 பெற்றதாக கொடுத்துள்ளனர். இந்த தவறுகள் எல்லாம் மதிப்பெண்களை கூட்டும்போது ஏற்பட்ட பிழையாகும். இதைப்போல பல மாணவர்களுக்கு கூட்டல் பிழையுடன் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.
50 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்: இந்த ஆண்டு 72 மையங்களில் 25 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 60 லட்சம் விடைத்தாள்கள் திருத்தப்பட்டன. 50 ஆயிரம் மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட விடைத்தாள் நகலை பார்த்தபோதுதான் கூட்டலில் பிழை ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.
மேலும் ஒரு சில விடைத்தாள்கள் முறையாக திருத்தப்படாமல் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது. 4,500 பேர் மறு மதிப்பீடு செய்யுமாறு விண்ணப்பித்திருந்த நிலையில் ஆசிரியர்களின் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஒரு விடைத்தாளைத் திருத்தம் செய்வதற்கு 4 ஆசிரியர்கள் பொறுப்பாகிறார்கள். தவறு ஏற்படும்போது அவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டும். அந்த அடிப்படையில் பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 விடைத்தாள் மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண் மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.
விடைத்தாள் திருத்தம் செய்வதில் ஆசிரியர்கள் எவ்வாறு தவறு செய்திருக்கிறார்கள் என்பதை பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர்கள் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல் கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 500-க்கும் மேலான ஆசிரியர்களுக்கு அவர்கள் செய்த தவறு குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தேர்வுத்துறை உயரதிகாரிகள் கூறியது: மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்யும்போது ஆசிரியர்களின் தவறு தெரிய வருகிறது. கடந்த காலங்களை விட படிப்படியாக தவறுகள் குறைந்துள்ளன.
கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது பள்ளிக்கல்வித் துறை இயக்குநர்தான் நடவடிக்கை எடுப்பார். நாங்கள் அவர்களின் பட்டியலை கொடுத்து விடுவோம். தலைமைக் கண்காணிப்பாளர் உள்பட 4 பேர் விடைத்தாள் திருத்தம் செய்வதற்கு பொறுப்பாளர்கள் ஆவர் என்றனர்.
மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதில் தவறு செய்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.