Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Monday, March 23, 2026

இன்ஜினீயரிங் படிப்பு; பிளேஸ்மென்ட் இல்லாத இந்த கோர்ஸ்கள்; கல்வியாளர் அஸ்வின் அலசல்

அண்ணா பல்கலைக்கழகத்தின் முதன்மை கல்லூரிகளில் 2026-ஆம் ஆண்டுக்கான கட்-ஆப் மதிப்பெண்கள், மாணவர் சேர்க்கை முன்னுரிமைகள் மற்றும் உயரிய ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் குறித்த விரிவான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களின் முதன்மைத் தேர்வாக அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி (CEG), எம்.ஐ.டி (MIT) மற்றும் ஏ.சி.டெக் (ACT) ஆகிய வளாகங்கள் விளங்குகின்றன. இந்த ஆண்டுக்கான சேர்க்கை எதிர்பார்ப்புகள் மற்றும் கடந்த கால வேலைவாய்ப்பு தரவுகள் குறித்த தகவல்களை அஸ்வின் தனது விரிவான ஆய்வை கல்வி ஆலோசகர் அஸ்வின் வெளியிட்டுள்ளார்.

மாணவர்களின் விருப்ப வரிசையில் கிண்டி பொறியியல் கல்லூரியின் (CEG) கணினி அறிவியல் துறை (CSE) முதலிடத்தில் உள்ளது. இதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் பொதுப் பிரிவினருக்கு 199 ஆகவும், இதர பிரிவினருக்கு 198.5 முதல் 199 வரையிலும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் (ECE) மற்றும் தகவல் தொழில்நுட்பம் (IT) ஆகிய துறைகள் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.

எம்.ஐ.டி வளாகத்தைப் பொறுத்தவரை, கணினி அறிவியல் மற்றும் ஈ.சி.இ துறைகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது. இங்கு கணினி அறிவியல் துறைக்கு 198 மதிப்பெண்களுக்கு மேல் கட்-ஆஃப் இருக்க வாய்ப்புள்ளது. ஏ.சி.டெக் வளாகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் பயோ டெக்னாலஜி போன்ற துறைகளுக்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment