Search This Blog

Tuesday, May 7, 2019

ஒடிசாவில் வரும் 20ம் தேதி நீட் தேர்வு நடக்கிறது

0 comments

புவனேஸ்வர்:ஒடிசாவில் புயலால் ஒத்தி வைக்கப்பட்டு இருந்த நீட் தேர்வு வரும் 20ம் தேதி நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் ஒத்திவைக்கப்பட்டிருந்த 'நீட்' தேர்வு, மே 20ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மே 5ம் தேதி மருத்துவப் படிப்பிற்கான 'நீட்' தேர்வு நடந்தது.

ஒடிசாவில் போனி புயல் காரணமாக 'நீட்' தேர்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்டிருந்த நீட் தேர்வு, மே மாதம் 20ஆம் தேதி நடைபெறும் எனவும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களிலேயே தேர்வுகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.