Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 28, 2019

வரலாற்றில் இன்று 28.05.2019

மே 28 கிரிகோரியன் ஆண்டின் 148 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 149 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 217 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1503 – ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது.
1588 – 30,000 பேர்களுடன் ஸ்பானிய ஆர்மாடா எனப்படும் 130 ஸ்பானியக் கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன.
1737 – வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார்.
1905 – ரஷ்ய-ஜப்பானியப் போர்: சூஷிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்யக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு ஜப்பானியர்களால் அழிக்கப்பட்டது.


1815 – சிங்கள-முஸ்லிம் கலவரம், 1915: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து ஜூன் 5 இல் முடிவுக்கு வந்தது.
1937 – கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலத்தை பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.
1940 – இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம் ஜெர்மனியிடம் சரணடைந்த்து.
1942 – இரண்டாம் உலகப் போர்: நாசிகள் தமது சகாவான ரைன்ஹார்ட் ஹைட்ரிக் படுகொலை செய்யபட்டமைக்குப் பதிலடியாக செக்கோசிலவாக்கியாவில் 1800 பேரைப் படுகொலை செய்தனர்.
1958 – இலங்கை இனக் கலவரம், 1958: இலங்கையின் ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
1964 – பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
1974 – வட அயர்லாந்தில் அதிகாரப் பரவலாக்கம் குறித்த சன்னிங்டேல் உடன்பாடு முறிந்தது.
1987 – மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த 19-வயது மத்தாயஸ் றஸ்ட் சிறிய ரக விமானம் ஒன்றில் மொஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் தரையிறங்கினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட இவர் ஆகஸ்ட் 13, 1988இல் விடுவிக்கப்பட்டார்.
1991 – எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.


1995 – ரஷ்யாவின் நெஃப்டிகோர்ஸ்க் நகரில் இடம்பெற்ற 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
1998 – பாகிஸ்தான் ஐந்து அணுவாயுதச் சோதனைகளை நிகழ்த்தியது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், மற்றும் சில நாடுகள் பாகிஸ்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.

பிறப்புகள்

1865 – மைசூர் வாசுதேவாச்சாரியார், கருநாடக இசைப் பாடகர் (இ. 1961)
1923 – என். டி. ராமராவ், இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. 1998)
1923 – டி. எம். தியாகராஜன், கருநாடக இசைக் கலைஞர் (இ: 2007)
1980 – ம. சிவசுப்பிரமணியன், தமிழ் எழுத்தாளர்

இறப்புகள்

1884 – சாமுவேல் ஃபிஸ்க் கிறீன், தமிழ் மருத்துவ முன்னோடி, அமெரிக்கக் கிறிஸ்தவ ஊழியர் (பி. 1822)
1972 – எட்டாம் எட்வேர்ட், ஐக்கிய இராச்சியத்தின் முடி துறந்த மன்னர் (பி. 1894)
1998 – இராஜ அரியரத்தினம், ஈழத்துப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1916)



சிறப்பு நாள்

அசர்பைஜான், ஆர்மீனியா – குடியரசு நாள்
பிலிப்பீன்ஸ் – தேசிய கொடி நாள்