Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 19, 2019

விண்ணில் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி-சி46 ராக்கெட்டை நேரில் பார்வையிட விரும்பும் 1000 பேருக்கு வாய்ப்பு...

சென்னை:நேரில் பார்வையிட 1000 பேருக்கு வாய்ப்பு... வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 22-ந்தேதி விண்ணில் ஏவப்படும் பி.எஸ்.எல்.வி-சி46 ராக்கெட்டை நேரில் பார்வையிட விரும்பும் 1000 பேருக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.


விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் குறித்த ஆர்வத்தை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் வகையிலும் இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் நடவடிக்கைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வருகையிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 1-ந்தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி45 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டபோது அதை பார்வையிட முதன் முறையாக 1000 பேருக்கு இஸ்ரோ அனுமதி வழங்கியது.


இதற்காக இஸ்ரோ வளாகத்தில் விண்வெளி கண்காட்சியகம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையிலான திறந்தவெளி பார்வையாளர் மாடம், ராக்கெட், செயற்கைகோள், புகைப்பட கண்காட்சியகம் மறறும் இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் வரலாறு, தொழில்நுட்ப வளர்ச்சியை அறிந்து கொள்வதற்கான தகவல்கள் ஆகியவற்றை கொண்ட பூங்கா ஒன்றை இஸ்ரோ அமைத்துள்ளது.
வருகிற 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட உள்ள பி.எஸ்.எல்.வி-சி46 ராக்கெட் ஏவுதலை பொதுமக்கள் நேரில் பார்ப்பதற்கான முன் பதிவை இஸ்ரோ தொடங்கியுள்ளது. இதை பார்ப்பதற்கு 1000 பேர் வரை அனுமதிக்கப்பட உள்ளனர்.


விருப்பம் உள்ளவர்கள் இஸ்ரோ இணையதளத்தில் தேவையான விவரங்களை பதிவு செய்து அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யலாம். ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவன் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவு தளத்தில் இருந்து வருகிற 22-ந்தேதி காலை 5.27 மணிக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளது.
இந்த ராக்கெட் மூலம் ரிசாட் 2-பி என்ற செயற்கைகோள் புவியில் இருந்து 555 கி.மீ. தொலைவில் திட்டமிடப்பட்ட விண்வெளி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைகோளில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீன புகைப்பட சாதனங்கள் இணைக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் ரேடார் தொழில் நுட்பத்தின் உதவியுடன் பூமியை தெளிவாக படம் பிடித்து தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பும்.


இந்த செயற்கைகோள் இரவிலும், பகலிலும் மட்டுமல்லாது வானம் மேக மூட்டத்துடன் இருக்கும்போது கூட பூமியின் பரப்பை மிக தெளிவாக படம் பிடித்து அனுப்புவதற்காகவே விண்ணில் செலுத்தப்படுகிறது.