Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, May 25, 2019

இதை கூட விளம்பரம் பண்ணபோறாங்க? பாத்து ஸ்டேட்டஸ் போடுங்க


தற்போது பிரபலமாக இருக்கும் சோசியல் மீடியாக்களான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் அனைத்திலுமே ஏதாவது ஒரு பொருளின் அல்லது நிறுவனத்தின் விளம்பரங்கள் வந்து நம்மை ஓயாமல் கடுப்பேற்றும். சரி ஏதாவது வீடியோ பார்க்கலாம் என யூடியூப் சென்றால் அங்கேயும் ஸ்கிப் ஆப்சன் இல்லாத விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருக்கும்.


இப்படியே எல்லா சோசியல் மீடியாவும் விளம்பரம் போடும்போது 'நாங்க மட்டும் இளிச்சவாயலுவா?' என்று தன் பங்குக்கு விளம்பர சேவையை தொடங்க இருக்கிறது வாட்ஸ் அப். வாட்ஸ் அப்ல விளம்பரம் எப்படி போடப்போகிறார்கள்?
நம்ம சாட் செய்யும்போதோ, சாட் லிஸ்ட்டை செக் செய்யும்போதோ அல்ல. போரடிக்கிதுன்னு ஸ்டேட்டஸ் பாக்க போவீங்கள்ல. அங்கதான் போடபோறாங்க விளம்பரம். ஸ்டேட்டஸ் பாக்கும்போது குறுக்க மறுக்க ஓடும் விளம்பரங்களை நீங்க ஸ்கிப் பண்ண முடியாது. 'நான் கிடைக்கிற கொஞ்ச நேரத்துல ஸ்டேட்டஸ் பாக்க வந்தா அங்கேயும் விளம்பரம் போடறாங்களே' என நீங்கள் நினைத்தால் காசு கட்டி ப்ரீமியம் வாட்ஸ் அப் வாங்கி கொள்ளலாம்.


உங்களுக்கு விளம்பரம் இல்லாத சேவையை அது வழங்கும். இதையெல்லாம் தாண்டி பேஸ்புக்கின் சார்பு ஆப்தான் வாட்ஸ்அப் என்பதால் நீங்கள் பேஸ்புக்கிலும், இன்ஸ்டாவிலும் எதை அதிகம் தேடுகிறீர்களோ அதை பொறுத்து வாட்ஸ்அப்பில் வருகிற விளம்பரங்களும் இருக்கும். உங்க ஸ்டேட்டஸை பாக்குறவங்களுக்கும் அந்த விளம்பரங்கள் காட்டப்படலாம். 2020ல் இந்த ஆப்ஷன் வாட்ஸ் அப்பில் வர இருப்பதாக கூறப்படுகிறது.