Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 19, 2019

பள்ளிகளின் வசூல் வேட்டை! நீதிபதி கண்டிப்பு!


கோவையில் மாதா அமிர்தானந்த மயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளிநிர்வாகம், பாடப்புத்தகங்களுக்கு 5 ஆயிரமும், சீருடைகள், காலணிகள், புத்தகப்பை,மதிய உணவு எடுத்துச்செல்வதற்கான பைகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் செலுத்தவேண்டும் என்று கூறியதால் பெற்றோர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. ஹேமலதா உள்ளிட்ட 2 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


நீதிபதி கார்த்திகேயன் முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது,தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரைத்த 450 ரூபாய் விலைபுத்தகங்களுக்கு பதிலாக, 5 ஆயிரம் விலைகொண்ட ஆக்ஸ்போர்டு மற்றும்கேம்பிரிட்ஜ் புத்தகங்களை பள்ளி நிர்வாகங்கள் வழங்குவதால் நடுத்த பெற்றோர்கள்பாதிக்கப்படுகின்றனர் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதன் பின்னர்நீதிபதி, பாடபுத்தகங்கள், சீருடைகள், காலணிகளை விற்கலாம். ஆனால், பிறபொருட்களை வாங்கும்படி பெற்றோரை நிர்பந்திக்கக்கூடாது என்று உத்தரவிட்டார்.