Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, May 19, 2019

திசைப்பெயர்ப் புணர்ச்சி TNPSC TET TRB NET SET VAO STUDY MATERIALS




WATCH VIDEO AND CLICK DOWNLAOD
திசைப்பெயர்ப் புணர்ச்சி

வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்பன திசைப் பெயர்கள் ஆகும்

ஒரு திசைப் பெயரோடு மற்றொரு திசைப் பெயரும் பிற பெயர்ச் சொற்களும் வந்து இணைவதனைத் திசைப்பெயர்ப் புணர்ச்சி எனப்படும் வழங்குகிறோம்.

வடக்கு + கிழக்கு = வடகிழக்கு
வடக்கு + மேற்கு = வடமேற்கு
வடக்கு + வேங்கடம் = வடவேங்கடம்.

வடக்கு என்ற திசைப்பெயரோடு கிழக்கு, மேற்கு என்ற திசைப்பெயர்களும் மலை, நாடு, வேங்கடம் முதலான திசைப்பெயர் அல்லாத பிற பெயர்ச்சொற்களும் வந்து இணையும்போது, நிலைமொழியின் ஈற்றில் உள்ள க் என்னும் மெய்யெழுத்தும், கு என்னும் உயிர்மெய்யெழுத்தும் கெட்டுப் புணரும்.

தெற்கு + கிழக்கு = தென்கிழக்கு
தெற்கு + மேற்கு = தென்மேற்கு
தெற்கு + குமரி = தென்குமரி
தெற்கு + பாண்டி = தென்பாண்டி

தெற்கு என்ற திசைப்பெயரோடு கிழக்கு, மேற்கு என்ற திசைப்பெயர்களும் குமரி, பாண்டி முதலான திசைப்பெயர் அல்லாத பிற பெயர்ச்சொற்களும் வந்து இணையும்போது, நிலைமொழியீற்றில் உள்ள கு என்னும் உயிர்மெய் கெட்டு, றகர மெய் னகர மெய்யாகத் திரிந்து புணரும்.

மேற்கு + காற்று = மேல்காற்று
மேற்கு + ஊர் = மேலூர்

மேற்கு என்ற திசைப்பெயரோடு திசைப் பெயரோ, திசைப் பெயரல்லாத வேறு பெயர்சொற்களோ வந்து சேரும் பொழுது, நிலைமொழியிலுள்ள உயிர்மெய்யெழுத்தான கு கெட்டு, றகர மெய், லகர மெய்யாகத் திரிந்து புணரும்.

கிழக்கு + கடல் = கீழ்கடல்
கிழக்கு + நாடு = கீழ்நாடு

கிழக்கு என்ற திசைப்பெயரோடு திசைப் பெயரோ, திசைப் பெயரல்லாத வேறு பெயர்சொற்களோ வந்து சேரும் பொழுது, நிலை மொழியில் உள்ள ககர ஒற்றும், ஈற்றும் உயிர்மெய்யெழுத்தான குவ்வும், கிழ என்பதில் உள்ள அகரம் கெட்டுக் கீழ் என முதல் எழுத்து நீண்டும் புணரும்.

"திசையொடு திசையும் பிறவும் சேரின்
நிலையீற்று உயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்
றகரம் னலவாகத் திரிதலும் ஆம் பிற"- (நன்னூல் நூற்பா - 186)