Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, May 31, 2019

செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயரை அனுப்ப ஒரு அறிய வாய்ப்பு.!

செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் கால் பதிப்பதற்கு இன்னும் சில ஆண்டு காலமே பாக்கி உள்ள நிலையில், தற்பொழுது நாசா செவ்வாய்க் கிரகம் நோக்கி, மார்ஸ் 2020 என்ற ரோவரை ஜூலை 2020 இல் விண்ணில் ஏவப்போகிறதென்று அதிகாரப்பூர்வமாக நாசா அறிவித்துள்ளது.



நாசா விடுத்த அழைப்பு
அதுமட்டுமின்றி பொது மக்களின் பெயர்களையும் செவ்வாய்க்கு அனுப்ப திட்டமிட்டு, புதிய முறைச்சியை கையில் எடுத்துள்ளது. இதற்காக நேரடியாக மக்களை தங்களின் பெயர்களை செவ்வாய்க்கு அனுப்ப அழைப்பு விடுத்துள்ளது. இந்த முயற்சியில் மக்கள் பங்கேற்றுக்கொள்ள அவர்களின் பெயர்களை SEND YOUR NAME TO MARS இந்த வலைத்தளத்தில் பதிவு செய்து உங்கள் பெயரிற்கான போர்டிங் பாஸ்சை வாங்கிக்கொள்ளுங்கள் என்று அறிவித்துள்ளது.



மார்ஸ் ரோவர் 2020
இதன்படி நாசா 2020 இல் அனுப்ப உள்ள மார்ஸ் ரோவரின் கீழ் தளத்தில் பொருத்தப்பட்டுள்ள "டைம் சிப்"பில் பெயர்கள் பொறிக்கப்பட்டு செவ்வாய்க்கு அனுப்பப்படவுள்ளது. இந்த சிலிக்கான் சிப் இல் பதிவு செய்யப்பட்ட பெயர்கள் அனைத்தும் எலெக்ட்ரோ பீம்மீனாள் பொறிக்கப்படும். இதில் வரையப்படும் பெயர்களின் அளவு மனிதனின் முடியை போன்று 1000 மடங்கு சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.
நாசாவின் அறிவிப்பின்படி இந்த ரோவர் ஜூலை 2020 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டு, பிப்ரவரி 2021 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் உங்களின் பெயருடன் தரை இறங்கி புதிய வரலாறு படைக்கவுள்ளது. இந்த வரலாற்றில் உங்கள் பெயர்கள் இருக்க வேண்டும் என்று எண்ணினால் உடனே இந்த வலைத்தளத்திற்குச் சென்று பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுங்கள்



செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சோதனைகளை மேற்கொள்ள இந்த ரோவர் அனுப்பப்படுகிறது. இந்த ரோவர் செவ்வாய்க் கிரகத்தில் நுண்ணுயிர் வாழ்வின் அறிகுறிகள் உள்ளதா என்றும் அல்லது இதற்கு முன்பு இருந்ததா என்றும் சோதனை செய்யும். அதுமட்டுமின்றி செவ்வாய்க் கிரகத்தின் பருவநிலை, காலநிலை, புவியியல் போன்ற அனைத்து விஷயங்களையும் ஆராயும் என்று நாசா தெரிவித்துள்ளது