Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, May 7, 2019

அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட அறிவிப்பு.! மகிழ்ச்சியில் மாணவர்கள்.!!


தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியவை, அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சைக்கிள், மடிக்கணினி, புத்தக பை, காலணி என 14 வகை பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியாவிற்கே தமிழகம் ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது, அதற்கு பள்ளிக்கல்வித் துறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதுதான் காரணம். .


உயர்கல்வியில் இந்தியாவின் இலக்கு 25.6 சதவீதம் தான். ஆனால் தமிழகத்தில் 48.9 சதவீதம் அளவிற்கு உயர்வடைந்துள்ளது. அதற்கு பள்ளிகல்வி துறை மூலமாக வழங்கப்பட்ட சலுகைகள் தான் காரணம். இந்த ஆண்டு புதிய திட்டமாக 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை துவங்கப்படும், 6, 7, 8 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்காக 7,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படவுள்ளது. இதைபயன்படுத்தி மாணவர்கள் தங்கள் மடிகணினி மூலமாகவே படித்துக்கொள்ளலாம் என்று கூறினார்.