Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, May 20, 2019

இக்னோ பல்கலையில் 'அட்மிஷன்' அறிவிப்பு!


இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில், ஜூலை, 31 வரை, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.'இக்னோ' என அழைக்கப்படும், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில், இளநிலை, முதுநிலை, சான்றிதழ் மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான சேர்க்கைக்கு, விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது.


படிப்பில் சேர விரும்புவோர், onlineadmission.ignou.ac.in என்ற இணையதளத்தில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்ய லாம்.விண்ணப்பங்களை, ஜூலை, 15 வரை சமர்ப்பிக்கலாம்; டிப்ளமா படிப்புகளுக்கு, ஜூலை, 31 வரை விண்ணப்பங்களை வழங்கலாம் என, பல்கலையின், சென்னை மண்டல இயக்குனர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.