திருவனந்தபுரம், கேரளப் பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக மானியக் குழுவின் மனிதவள மேம்பாட்டு மையமும் அப்பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையும் இணைந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியப் புத்தொளிப் பயிற்சிப் பட்டறை 2019 மேத் திங்கள் 15 முதல் 28 வரை பதினான்கு நாள்கள் நடைபெற்றது.
இப்புத்தொளிப் பயிற்சிப் பட்டறையின் நிறைவு விழா 28.05.2019 செவ்வாய்க் கிழமை அன்று நடைபெற்றது. இவ் விழாவில் மனிதவள மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் முனைவர் சுதீர் அவர்கள் தலைமை வகித்தார். அவர் பேசுகையில் மனித மனங்களிடையே புரிதலையும் மனித நேயத்தையும் மனித ஆற்றலையும் வளப்படுத்துவதே இப்புத்தொளிப் பயிற்சியின் முக்கிய நோக்கமாக அமைகிறது என்றார். சித்தூர் அரசுக் கல்லூரியின் தமிழ்த் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் விஜயன் அவர்கள் வரவேற்று பேசினார் , சென்னை,உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் கு.சிதம்பரம் அவர்கள் இயக்குனருக்குச் சிறப்பு செய்து கருத்துரை வழங்கினார். தஞ்சாவூர், அகமது கபீர் கல்லூரியின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் செய்யது அகமது கபீர் இப்பயிற்சி குறித்து கருத்துரை வழங்கினார். இப்புத்தொளி பயிற்சிப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளரும் கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் தலைவருமான பேரா. முனைவர் ஹெப்ஸி ரோஸ் மேரி அவர்கள் நன்றியுரை நல்கினார்! சுங்கான்கடை, அய்யப்பா மகளிர் கல்லூரியின் தமிழ் உதவிப் பேராசிரியர்
முனைவர் மயிலா அவர்கள் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.
இப்புத்தொளிப் பயிற்சி பட்டறையில் தமிழ்மொழி இலக்கியத்தில் தற்கால ஆய்வுகள் போக்குகள் குறித்து பேசப்பட்டன! குறிப்பாக, தமிழ் இலக்கியக் கோட்பாடுகள், தமிழ் எழுத்தாளர்கள்களும் திரனாய்வும், சங்க இலக்கியத்தில் நவீன ஆய்வுப் போக்குகள், கேரளத்தில் கண்ணகி வழிபாடு, தொன்மவியல் கோட்பாடுகள், அறிவியல் தமிழ், நாடக மரபுகள், தமிழிசையும் இலக்கியமும் போன்ற பொருண்மைகள் குறித்து பேராசிரியர்கள் முனைவர் சி.சுப்பிரமணியம், முனைவர் பார்த்திபராஜா, முனைவர் ஜெயகிருஷ்ணன், முனைவர் விஜியலட்சுமி, முனைவர் திலகவதி எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜா உள்ளிட்டோர் தமது கருத்துக்களை முன் வைத்தனர்!
இப்புத்தொளிப் பயிற்சிப் பட்டறையில் கேரளம் மற்றும் தமிழகத்தைச் சார்ந்த பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளின் தமிழ்த் துறைகளில் பணியாற்றி வரும் உதவிப் பேராசிரியர்கள் முனைவர் குமார செல்வா, செய்யதலி பாத்திமா, பிரீதா, முனைவர் கணநாதன், முனைவர் பிரின்ஸ், முனைவர் ஜோதி முருகன் உள்ளிட்ட 58 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.