Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 2, 2019

கோடை விடுமுறையில் மாற்றம்?! அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!



மாணவர்களுக்கு தேர்வு முடிந்து கோடை விடுமுறையில் இருந்து வரும் நிலையில் அவர்களுக்கு மீண்டும் எப்போது பள்ளி திறக்கப்படும் என்பது உறுதியாகாத சூழல் உள்ளது. வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகளை திறந்து விடுவது வழக்கம். ஆனால் கடந்த சில வருடங்களாக கோடை விடுமுறை அதிகப்படியான வெப்பத்தினால் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அதிகப்படியான வெப்பத்தினால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதனால் கோடை விடுமுறை நீட்டித்து அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த வருடம் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்கூட்டியே வந்ததால் மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகளை முடித்து ஏறக்குறைய ஐம்பது நாட்களுக்கு மேல் ஆன ஒரு நீண்ட விடுமுறையை தமிழக அரசு அளித்துள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை எதுவரை விடப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது கோடை வெப்பம் அதிகரித்தால் விடுமுறை முடிந்து பின்னர் பள்ளி திறக்கும் தேதி அறிவிக்கப்படும் எனவும், இது குறித்து முதலமைச்சரிடம் கலந்து ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் எனவும் கோயம்புத்தூரில் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஒருவேளை கோடை வெப்பம் அதிகரித்தால் பள்ளி திறக்கும் தேதி தள்ளி போவதற்கு வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான்...