Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 8, 2019

பள்ளி முழு விவரங்களையும் 'EMIS' இல் பதிவு செய்ய வேண்டும்

மதுரையில் உள்ள பள்ளிகளின் முழு விவரங்களையும் 'எமிஸில்' (கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு) பதிவு செய்ய வேண்டும்" என முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தெரிவித்தார்.மாவட்ட அளவில் அனைத்து மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்களுக்கான 'எமிஸ்' பதிவு குறித்த சிறப்பு ஆலோசனை முகாம் சுபாஷினி தலைமையில் நடந்தது.டி.இ.ஓ.,க்கள் அமுதா, முத்தையா, இந்திராணி, மீனாவதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுபாஷினி பேசுகையில், "பள்ளிக்கு எந்த பெயரில் அங்கீகாரம் உள்ளதோ அதன் முழு பெயரையும் எமிஸில் பதிவு செய்ய வேண்டும். எழுத்துக்களை பதிவிட 50 கட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஊர் பெயரை பதிவு செய்ய 20 கட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உதவிபெறும் பள்ளிகளில் சுயநிதி பிரிவு படிப்பு, எத்தனை செக்ஷன்கள் உள்ளன என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்" என்றார்.