Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, May 16, 2019

INDIAN COASTGUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சமையல்காரர் மற்றும் ஸ்டூவர்டு உள்ளிட்ட பணி | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-6-2019.

INDIAN COASTGUARD RECRUITMENT 2019 | INDIAN COASTGUARD அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சமையல்காரர் மற்றும் ஸ்டூவர்டு உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : --- | விண்ணப்பிக்க கடைசி நாள் : 10-6-2019. இணைய முகவரி : www.joinindiancoastguard.gov.in



கடலோர காவல் படையில் பயிற்சியுடன் கூடிய ‘யந்த்ரிக்’ பணிக்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய கடலோர காவல் படை, ‘யந்திரிக்/2-2019 பேட்ஜ்’ பயிற்சியில் தகுதியான இளைஞர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். சமையல்காரர் மற்றும் ஸ்டூவர்டு பணிக்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவர்களும், அதிகபட்சம் 22 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அதாவது 1-10-1997 மற்றும் 3-9-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் விண்ணப்பதாரர் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும், மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியுடன் 6/9 மற்றும் 6/12 என்ற அளவிலும், கண்ணாடியின்றி 6/24 என்ற அளவுக்குள்ளும் இருக்க வேண்டும். நிறக்குருடு, மாலைக்கண் போன்ற பாதிப்புகள் இருக்கக்கூடாது. உடல் நலம் மற்றும் உளநலம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, உடல்கூறு அளவு மற்றும் உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப் படையில் தேர்வு செய்யப்படுவார்கள். குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம்.

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு 5-6-2019 அன்று தொடங்குகிறது. 10-6-2019-ந் தேதிவரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை 2 கணினிப் பிரதிகள் எடுத்து வைத்துக் கொள்ளவும். விரிவான விவரங்களை www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.