Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 10, 2019

வரலாற்றில் இன்று 10.06.2019


ஜூன் 10 கிரிகோரியன் ஆண்டின் 161 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 162 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 204 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1190 – மூன்றாவது சிலுவைப் போர்: புனித ரோமப் பேரரசன் முதலாம் பிரெடெரிக் ஜெருசலேம் நகரை நோக்கிய படையெடுப்பின் போது சாலி ஆற்றில் மூழ்கி இறந்தான்.
1786 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் பத்து நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக டாடு ஆறு அணைப்பு உடைந்ததில் 100,000 பேர் கொல்லப்பட்டனர்.
1801 – சிவகங்கையின் சின்னமருது “ஆங்கிலேயர்களின் அதிகாரத்தை உதறித்தள்ளி சுதேசி மன்னர்களின் கீழ் ஜம்புத்தீவின் மக்கள் வாழவேண்டும்” என்ற தனது சுதந்திரப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்.
1838 – ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இன்வெரெல் என்ற இடத்தில் 28 ஆஸ்திரேலியப் பழங்குடிகள் ஆங்கிலேய குடியேறிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


1846 – கலிபோர்னியாக் குடியரசு மெக்சிக்கோவிலிருந்து விடுதலையை அறிவித்தது.
1886 – நியூசிலாந்தில் டரவேரா மலை தீக்கக்கியதில் 153 பேஎர் கொல்லப்பட்டனர்.
1898 – அமெரிக்கக் கடற்படையினர் கியூபா தீவில் தரையிறங்கினர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படையிடம் நோர்வே வீழ்ந்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா மற்றும் பிரான்சுக்கு எதிராக இத்தாலி போரை அறிவித்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியப் படைகள் ஆங்கிலக் கால்வாயை அடைந்தனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிக்கு எதிராக கனடா போரை அறிவித்தது.
1940 – இரண்டாம் உலகப் போர்: நோர்வே ஜெர்மனியர்களிடம் சரணடைந்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் ஒரேடூர்-சர்-கிளேன் என்ற இடத்தில் 642 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் டிஸ்டோமோ என்ற இடத்தில் 218 பொதுமக்கள் ஜெர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.
1945 – ஆஸ்திரேலியப் படைகள் புரூணையை விடுவிப்பதற்காக அங்கு தரையிறங்கினர்.
1956 – இலங்கையில் அம்பாறையில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1967 – இஸ்ரேலும் சிரியாவும் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வந்ததில் ஆறு-நாள் போர் முடிவுக்கு வந்தது.


1984 – தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு சிறையை உடைத்து அரசியல் கைதியாக இருந்த நிர்மலா நித்தியானந்தனை விடுவித்தனர்.
1986 – யாழ்ப்பாணம், மண்டை தீவில் குருநகரைச் சேர்ந்த 31 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1990 – இலங்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்தது.
1996 – வடக்கு அயர்லாந்தில் சின் ஃபெயின் பங்குபற்றாத நிலையில் அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
1998 – முல்லைத்தீவு, சுதந்திரபுரப் பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதலில் 25க்கும் மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டனர்.
1999 – கொசோவோவில் இருந்து சேர்பியப் படையினர் விலக எடுத்துக்கொண்ட முடிவை அடுத்து நேட்டோ தனது தாக்குதல்களை நிறுத்தியது.
2003 – நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
2006 – ஈழத்தமிழர் படுகொலைகள், 2006: மன்னார், வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 தமிழர் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புகள்

1925 – வே. தில்லைநாயகம், தமிழக நூலகத்துறையின் முன்னோடி
1971 – பாபி ஜிண்டல், அமெரிக்கா, லூசியானாவின் ஆளுனர்



இறப்புகள்

கிமு 323 – மகா அலெக்சாண்டர் (பி. கிமு 356)
1836 – அன்ட்ரே-மரீ அம்பியர், பிரெஞ்சு இயற்பியலாளர் (பி. 1775)
2004 – ரே சார்ல்ஸ், அமெரிக்க இசைக்கலைஞர் (பி. 1930)

சிறப்பு நாள்

போர்த்துக்கல் – தேசிய நாள்