Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, June 10, 2019

11 ஆம் வகுப்பிலேயே நீட் பயிற்சி நடத்திட வேண்டும் : தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை


11 ஆம் வகுப்பிலேயே நீட் பயிற்சி நடத்திட வேண்டும் : தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை :
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை :
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற ஒரு மாணவர்கூட நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்பிற்கு செல்லும் தகுதி பெறவில்லை என்ற அதிர்ச்சி செய்தி வேதனையளிக்கிறது.
நாடு முழுவதும்
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த 5ஆம் தேதி வெளியிடப்பட்டன. தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1,23,078 பேரில், 59,785 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 31,239 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள்.


இந்நிலையில், அரசு பள்ளிகளில் பயின்ற 2 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 4 மாணவர்கள் மட்டுமே 400 மதிப்பெண்களுக்கு மேல் நீட் தேர்வில் பெற்றுள்ளனர் . ஆனாலும் ஒருவருக்கு கூட மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்கும் அளவிற்கு மதிப்பெண் பெறவில்லை என்பது மற்றுமொரு அதிர்ச்சி. இதனால், அரசுபள்ளி மாணவர்கள் திறமையற்றவர்கள் என்பது அர்த்தமில்லை.
1 முதல் 12 ஆம் வகுப்புவரை மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு அப்பாடத்திலேயே வினாக்கள் கேட்டால் சுலபமாக வெற்றிப்பெற முடியும். மாறாக 1 முதல் 12 ஆம் வகுப்புவரை சிபிஎஸ்சி படித்த மாணவர்களுக்கு அதே பாடத்திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படுவதால் அம்மாணவர்கள் எளிதாக வெற்றிப்பெற முடிகின்றது.



தமிழக அரசு சார்பில் 412 நீட் பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சி அளித்தும் சொற்ப எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவே புதிய பாடத்திட்டம் தற்போது சிறப்பாகவும் சிபிஎஸ்சிக்கு நிகராகவும் உள்ளதால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே நீட் தேர்வுக்கு அரசு பள்ளி மாதணவர்கள் தயாராகமுடியும்.அதுவரை ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வின் முடிவு வெளியிடும்போதும் பெற்றோர்கள் மறுபிறவி எடுக்கிறார்கள் . மேலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவ கனவினை உண்மையாக்கிடவும் நீட் தேர்விலிருந்து விலக்கு என்பதே நிரந்தர தீர்வாகும். அதுவரை குறைந்தபட்சம் மருத்துவம் சார்ந்த பிரிவுகளுக்கு பதினோராம் வகுப்பிலேயே நீட் தேர்விற்கான பயிற்சியினை தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை தொடங்கிடவேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.



பி.கே.இளமாறன்
மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம். 98845 86716