ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இளநிலை சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை சட்டப் பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
இதில் முதல் கட்டமாக, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சிறப்புப் பள்ளியில் வழங்கப்படும் பிளஸ்-2 முடித்தவர்களுக்கான ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 18, 19 ஆகிய இரு தினங்கள் முதல் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டது.
பி.ஏ.-எல்.எல்.பி., பி.காம்.-எல்.எல்.பி., பி.சி.ஏ.-எல்.எல்.பி.ஆகிய மூன்று படிப்புகளிலும் மொத்தமுள்ள 362 இடங்களில், 136 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள 226 இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதியும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதியும் நடத்தப்படும்.
இதில் பங்கேற்க தகுதியுடையவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன


