Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 10, 2019

புதிய பாடத்திட்டத்தில் அதிக வினாக்கள்


புதிய பாடத்திட்ட வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டிருந்தால் கணிதம், உளவியல் வினாக்கள் கடினமாக இருந்தது. தமிழ் பாட வினாக்கள் எளிதாக இருந்தது'' என, நேற்று ஆசிரியர் தகுதி தேர்வு தாள் இரண்டு எழுதியோர் தெரிவித்தனர். தேனியில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்கள் அளித்த பேட்டி உளவியல் கடினம்: பி.சுகன்யாதேவி, தனியார் பள்ளி ஆசிரியை, நிலக்கோட்டை: பழைய பாடத்திட்டத்திலிருந்து வினாக்கள் கேட்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.
ஆனால், புதிய பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் 70 சதவீதம் கேட்கப்பட்டிருந்து. அதனால் எதிர்பார்த்த வினாக்கள் வரவில்லை. ஆனாலும் பெரும்பாலான கேள்விகளுக்கு விடையளித்துள்ளேன். வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. உளவியல் பாட வினாக்கள் கடினமாக இருந்தது. கணிதம் எளிது: எம்.வினிதா, தேனி: முதல் முறையாக தேர்வில் பங்கேற்கிறேன். உளவியல், ஆங்கிலம், கேள்விகள் ஆழ்ந்து படித்து புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது.


இதனால் என்னை போன்று முதல் முறை தகுதித் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு சிரமமாக உள்ளது. மற்றபடி கணிதம் எளிதாக, தீர்வு காணும் விதத்தில் கேட்கப்பட்டிருந்தது. அதில் ஒரு சில வினாக்கள் புதிய பாடத்திட்டத்திலும், பழைய பாடத்திலும் இருந்து கேட்கப்பட்டதால் சிரமமின்றி தேர்வை எழுதியுள்ளோம். தமிழிலும் குழப்பும் வினாக்கள் அதிக கேட்கப்பட்டிருந்தது. மொத்தத்தில் கடினம்.விடையளிப்பது கடினம்எஸ்.தீபா. தேனி: முதல்முறையாக தேர்வை எழுதுகிறேன்.
சமூக அறிவியல் என் விருப்ப பாடம் என்பதால் உளவியல் வினாக்கள் எளிதாக கேள்விகள் அமைந்திருந்தன. ஆங்கிலம் பாட வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தன. பிகர் ஆப் ஸ்பீச்' எனக் கூறுவார்கள். அந்த மாதிரியான வினாக்கள் ஆங்கில பாடத்தில் அதிகளவில் இடம் பெற்றதால் பதிலளிப்பது கடினம். தமிழ் பாட வினாக்கள் எளிதாக இருந்தது. புத்தகங்கத்தில் உள்ள உள்ளே வினாக்கள் கேட்கப்பட்டதால் எளிதாக இருந்தது.


தமிழில் குழப்பும் கேள்விகள்:எம்.மாலதி, தேனி: மொத்தம் 150 வினாக்களின் தமிழ் பாடத்தில் அதிக சொற்கள் அடங்கிய வினாக்கள் தேர்வர்களை குழப்பும் விதத்தில் கேட்கப்பட்டு இருந்தது. குறிப்பாக உளவியல் வினாக்கள் எப்போதும் கடினமாக இருக்கும் என்பதால் அதிக சிரத்தையுடன் தயாராகினேன். ஆனாலும் மீண்டும் விடையளிக்க முடியாத வினாக்களே இருந்தது. கணிதத்தில் நிறைய பகுதிகள் ஒன்றிணைக்கப்பட்ட வினாக்கள் இருந்ததால் விடையளிப்பதில் சிரமம் ஏற்பட்டது. கடினமான தேர்வுதான். புதிய பாட வினாக்கள் எம்.மீனா, ஆசிரியை, ராணுவ பள்ளி, திருச்சி: இதற்கு முன் கம்மவார் சங்கம் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தேன்.


இதற்கு முன் தேர்வு எழுதியிருக்கிறேன். ஆனால், இதில் புதிய பாடத்திட்டத்தில் கேள்விகள் பல கேட்கப்பட்டுள்ளன. மேலும், தமிழ் பாட வினாக்கள் அதிக நேரம் செலவழித்து பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தேர்வர்களை தள்ளுகிறது. அதேபோல் தீவிர பயிற்சி எடுத்தும், பயிற்சிக்கும் முன் தயாராகும் வினாக்கள், தேர்வில் வரவில்லை. மேலும், தமிழில் அதிக சொற்கள் நிறைந்த வினாக்கள் அதிகளவில் இடம் பெற்றது. அதனை புரிந்து வினாக்களுக்கு பதிலளிக்கவே நேரம் கடந்து, மனதில் குழப்பம் நீடிக்கிறது. என்னைப் போன்ற அனுபவ ஆசிரியர்கள் தேர்வை எழுதி விடுவார்கள்.


ஆனால், பி.எட்., முடித்துவிட்டு தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு கடினமானதுதான்.; எளிதாக விடையளிக்கலாம்சி.சிவபிரசாத், தேனி: 150 வினாக்களில் தமிழ் பாட வினாக்கள் கடினமாக இருந்தது. உளவியல் நல்ல புரிதல் இருந்தால் வினாக்களுக்கு விடையளித்து விடலாம். உளவியல் பாடத்திட்ட வினாக்களுக்கு பயிற்சி இல்லாதவர்களுக்கு பதிலளிப்பது மிக கஷ்டம். தமிழ் வினாக்களில் அதிக சொற்களை ஒன்றிணைக்கும் வினாக்கள் கடினமாக இருந்தது. தேர்வை எழுதியாச்சு என்ற மனநிறைவுதான் உள்ளது.'' என்றார்.