JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, June 22, 2019

மத்திய அரசு திறமையற்ற ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு


அனைத்து மத்திய அமைச்சகங்கள், துறைகள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகளின்படி, ஒவ்வொரு மத்திய அரசு, வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் பணி பதிவேடுகள் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஒருவரின் நேர்மை சந்தேகத்துக்குரியதாகவோ, செயல்பாடுகள் திறமைக்குறைவாகவோ இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களை பொதுநலன் கருதி, கட்டாய ஓய்வில் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, இந்த பதிவேடுகளை ஆய்வு செய்து, மாதந்தோறும் 15-ந் தேதிக்குள் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும், பொதுநலன் கருதி, முறைகேட்டில் ஈடுபடும் ஊழியரை கட்டாய ஓய்வில் அனுப்புவதற்கான பரிந்துரைகளை செய்வதில் உரிய நடைமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.