Search This Blog

Sunday, June 2, 2019

மாணவர்களுக்கு இனிய செய்தி!புது பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாம்-தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு

0 comments

நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கோடைவிடுமுறைக்கு பின் நாளை ( ஜூன் 3-ஆம் தேதி)பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார்.பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள், இதர பொருட்களை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்தார்.



இந்நிலையில் நாளை பள்ளி திறக்க உள்ள நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில்,தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் பயணிக்கலாம்.மேலும் சீருடை அணிந்து பயணிக்கும் மாணவ, மாணவிகள் டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ள்ளது.