JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, June 23, 2019

கணினி கோளாறு : முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு வேறு ஒரு நாளில் நடைபெறும்-ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அறிவிப்பு




குளறுபடி ஏற்பட்ட இடங்களில் முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு வேறு ஒரு நாளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்ட அறிவிப்பில், முதுகலை ஆசிரியர் பணிக்கான கணினி வழி தேர்வில் குளறுபடி ஏற்பட்ட இடங்களில் வேறு ஒரு நாளில் தேர்வு நடைபெறும். தொழில்நுட்பக் கோளாறால் தேர்வை முழுமையாக நிறைவு செய்யாதவர்களுக்கு வேறு ஒரு நாளில் தேர்வு நடைபெறும். தேர்வர்கள் எக்கராணத்தை கொண்டும் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.