Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 12, 2019

தினமலர் உங்களால் முடியும் நிகழ்ச்சி விழுப்புரம், கடலுாரில் நடக்கிறது


புதுச்சேரி: இன்ஜினியரிங் படிப்பு சேர்க்கைக்கான கவுன்சிலிங் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில், தினமலர் நாளிதழ் நடத்தும் &'உங்களால் முடியும்&' நிகழ்ச்சி வரும் 14ம் தேதி விழுப்புரத்திலும், 15ம் தேதி நெய்வேலி, கடலுாரில் நடக்கிறது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (டி.என்.இ.ஏ.,) நடத்தும் ஆன்லைன் இன்ஜினியரிங் கவுன்சிலிங் நுணுக்கங்களை தெரிந்து கொள்வது எப்படி என்பதற்கான நிகழ்ச்சி நடக்கிறது.இதில், பெற்றோர், மாணவர்களுக்கான பல்வேறு சந்தேகங்களை தீர்க்கும் வகையில், தினமலர் நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து, &'உங்களால் முடியும்&' நிகழ்ச்சி, வரும் 14ம் தேதி காலை 10.00 மணி முதல் 12.30 வரை விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியிலும், 15ம் தேதி காலை 10.00 மணி முதல் 12.30 வரை நெய்வேலி புத்தக கண்காட்சி வளாகமான லிக்னைட் ஹாலிலும், மாலை 3.00 மணி முதல் 5.30 மணி வரை கடலுார், மஞ்சக்குப்பம், சுப்ராயலு ரெட்டியார் மண்டபத்திலும் நடக்கிறது.

தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியோடு, கோ-ஸ்பான்சர்களாக ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் ைஹயர் டெக்னாலஜி, ராசிபுரம் முத்தையம்மாள் பொறியியல் கல்லுாரி இணைந்து நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், ஆன்லைன் இன்ஜினியரிங் கவுன்சிலிங் விதிமுறைகள் குறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குனர் (DOTE) டாக்டர் செந்தில்வேல் விளக்கம் அளிக்கவுள்ளார்.எந்த கல்லுாரி, எந்த படிப்பு குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி விளக்கம் அளிக்கிறார்.

கவுன்சிலிங்கை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து விளக்கம் அளித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சந்தேங்களுக்கு பதில் அளிக்கின்றனர்.கவுன்சிலிங் புத்தகம்நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், கவுன்சிலிங் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.