Search This Blog

Wednesday, June 5, 2019

திருடனால் இனி பீரோவை உடைத்து திருடவே முடியாது -தமிழக மாணவரின் அசத்தல் கண்டுபிடிப்பு

0 comments

தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், திருடன் பீரோவை உடைத்து திருடமுடியாதபடி ஒரு அசத்தலான கண்டுபிடிப்பை தயாரித்துள்ளார்

திருப்பூர் மாவட்டம் போயம்பாளையம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ் குமார். இவர் தனியார் கல்லூரியில் பயின்றுவருகிறார். இவர் செல்போன் மற்றும் சில மின்னணு கருவிகளை கொண்டு புதிய முறையில் லாக்கர் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இதில் பீரோவை யார் திறந்தாலும் உரிமையாளரின் போனுக்கு அழைப்பு வருவது போல லாக்கரை வடிவமைத்துள்ளார்.

இந்த அசத்தலான கண்டுபிடிப்பு குறித்து ஹரீஷ் குமார் கூறியதாவது



பீரோவின் லாக்கர் ஓப்பன் செய்ய சாவி துவாரத்தில் சர்க்கியூட் ஒன்றை தயாரித்துள்ளேன். உட்புறம் ஒரு செல்போனும் இதனுடன் பொருத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மெல்லிய சர்க்கியூட் மூலம் பாதுகாப்பாக இணைக்கப்பட்டுள்ளது.

யாரேனும் பீரோவினை திறக்க முற்பட்டால் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் மூலம் உரிமையாளருக்கு உடனடியாக அழைப்பு சென்றுவிடும். இதற்கு ரூ.2000 மட்டுமே ஆனது. என்னிடம் இருந்த பழைய செல்போன் மூலம் இதனை செய்தேன்.

கண்டுபிடிப்புகளில் எனக்கு நிறைய ஆர்வம் உண்டு. வெளியூர்களுக்கு செல்லும்போது பாதுகாப்பு தேவைப்படும் என்பதற்காக ஓய்வாக இருக்கும்போது இந்த டிஜிட்டல் லாக்கரை செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.