JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Tuesday, June 25, 2019

அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படும்- மத்திய அரசு தகவல்


புதுடெல்லி:

நாடு முழுவதும் சிறுமிகள், பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நேற்று மக்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறினார்.



இந்த திட்டத்தின் படி அரசு பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சிக்காக பள்ளி ஒன்றுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.