Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, June 11, 2019

பள்ளி, கல்லூரிகளில் கட்டாயப் பாடமாக வருகிறது "யோகா" - 'ஆயுஷ்' துறை அமைச்சர் அறிவிப்பு


அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் யோகாவை கட்டாய பாடமாக 'ஆயுஷ்' துறை மந்திரி ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார். அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் யோகாவை கட்டாய பாடமாக இடம்பெற செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு மத்திய 'ஆயுஷ்' அமைச்சகம் திட்டவரைவு ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இத்தகவலை 'ஆயுஷ்' துறை மந்திரி ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.


இந்த திட்டவரைவுக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், அப்படி கிடைத்தால், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பாடத்திட்டத்தில் யோகா இடம்பெறும் என்றும் அவர் கூறினார். சர்வதேச யோகா தினத்தையொட்டி, வருகிற 21-ந் தேதி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் நடக்கும் முக்கிய யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்வார் என்றும் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்தார். உலகம் முழுவதும் இருந்து யோகா குருக்கள், சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.