Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 11, 2019

ஆசிரியர்கள் 100 பேருக்கு சைகை மொழிபெயர்ப்பாளர் பயிற்சி

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:
* 14 வயதிற்கு மேற்பட்ட 920 மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்காக ரூ.2.55 கோடி செலவில் கூடுதலாக தொழிற்பயிற்சியுடன் கூடிய 23 பராமரிப்பு இல்லங்கள் அமைக்கப்படும்.
* மனநலம் பாதிக்கப்பட்ட 1100 மாற்றுத்திறனாளிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் ரூ.2.68 கோடி செலவில் கூடுதலாக 22 பராமரிப்பு இல்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அமைக்கப்படும்.
* செவித்திறன் பாதிக்கப்பட்ட 660 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான 33 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களுக்கு ரூ.75 லட்சம் செலவில் கற்பித்தல், கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.
* 266 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் 10 அரசு சிறப்புப் பள்ளி விடுதிகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் சலவை இயந்திரங்கள் வழங்கப்படும்.


* ஆரம்பநிலை பயிற்சி நிலையங்களில் மூளைமுடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 500 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.15 லட்சம் செலவில் சிறப்பு நாற்காலிகள் வழங்கப்படும்.
* செவித்திறன் குறையுடையோருடன் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள தொண்டு நிறுவனங்கள் மூலம் 100 ஆசிரியர்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் சைகை மொழிபெயர்ப்பாளர் பயிற்சி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Popular Feed

Recent Story

Featured News